Thursday 11 March 2010

மிக்ஸ் ஜோக்ஸ் 1

"சிந்திக்க தெரிந்த மனித குலத்திற்கே சொந்தமான கையிருப்பு ....
வேறு எந்த ஜீவராசிகளும் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு"

 சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
 



ஒரு வழுக்கைத் தலை ஆள்:

"கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"வழுக்கி விழுந்துட்டாங்க!"

 

 TTR : ஏம்பா... ரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கு. உனக்குதெரியாதா? எடு 200 ரூபாய்...
பயணி : என்ன சார் இது அநியாயமா இருக்கு...
TTR : என்னப்பா அநியாயம்?
பயணி : ரயிலுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டமா?
TTR : ??
பயணி : ரயிலே புகை பிடிக்கும் போது அதுக்குள்ளே இருக்கும் நான் மட்டும் புகைபிடிக்க கூடாதா....

 மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?"
"பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்"

"அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது இப்ப சினிமா பார்த்தாகணுமா?"
"படம் எடுக்கறவங்களே கடன் வாங்கித் தாங்க எடுக்கறாங்க. அதனால இது ஒண்ணும் தப்பில்லே!"

மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக் கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?"
"ஆமாம். இதுல என்ன சந்தேகம்?"
"பொறாமையில சொல்லலியே?!"

"ஆறு மணிக்கு, பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."
"என்ன கஷ்டம் இப்போ?"
"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"

"நம்ம வீட்டுப் பூனை டயட்ல இருக்கா?"
"ஏன் கேட்கறீங்க?"
"பாதி எலியைத் தானே திங்குது?"

குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு
டாக்டரைக் கேளுங்க."

"அவரை எதுக்கு கேட்கணும்?"
"டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும்
தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க."

"ஒரு கிலோ மீட்டர் தூரம் தானே என்னை டாக்டர்
நடக்கச் சொன்னார்? தவறுதலா ஒண்ணே
கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே?"
"கால் கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ்ல
நடந்து வாக்கிங் போயிடுங்க. சரியாகிடும்."

கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?
மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!

இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
"அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"

மனைவி : ஏங்க, என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப் படுத்துறே! பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!


"சே, காலம் ரொம்பக் கெட்டுப் போச்சுப்பா!"
"ஏம்பா?"
"என் பெண்டாட்டி கூடவே நான் அதிகமா கத்துறேன்னு என் சின்ன வீடு கோவிச்சுக்கிறா?"


 "ஹலோ இன்ஸ்பெக்டர்! பாரதி நகர், மூணாவது தெரு, ஏழு¡வது நம்பர் வீட்லேர்ந்து கேடி மயில்சாமி பேசறங்க. மூணு ரெட்டை வடச் சங்கிலி, ரெண்டு ஜதை முத்துப் பதிச்ச வளையல், வைர மோதிரம் நாலு, இருபதாயிரம் ரொக்கப் பணம் இவ்வளவுதான் திருடியிருக்கேன். நாளைக்கு வீட்டுக்காரங்க, அதிகப்படியா சொன்னா நம்பாதீங்க!"

. "உங்கப்பா ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி, அதில் ஒண்ணைப் பிடிச்சுட்டு வெச்சார்ன்னா மீதி எத்தனை இருக்கும்?"
"எட்டு சார்!"
"எப்படி?"
"அவருக்குத் தெரியாம நான் ஒண்ணை உருவிடறேன்ல..."

 "ஜட்டி, ப்ராவுடன் எந்த விளம்பரத்துக்கு போஸ் கொடுக்கறா அந்த மாடல்?"
"ஒன்பது கஜம் புடவை விளம்பரத்துக்குத்தான் போஸ் கொடுக்கறா. அவள் காலடியில் பார்... புடவைகள்." 

 

"திருடப் போகும்போது ஏன் பொம்பளை மாதிரி வேஷம் போட்டுக்கிறே?"
"மாட்டிக்கிட்டா பெண் கைதிகள் இருக்கிற சிறையில் அடைப்பாங்களே!"

 "உங்க ஆட்சியில் சுரங்கப் பாதைகளை அமைச்சதுக்காகவா உங்க மேல் வழக்குப் போட்டிருக்காங்க?"
"ஆமா. என்னோட பெரிய வீட்டுல இருந்து, சின்ன வீட்டுக்குப்போய் வர்ற மாதிரி, சுரங்கப் பாதைகளை அமைச்சிருந்தேன்!"


 "வரதட்சணையா வைரத்தைத் தர்றேன்னு சொல்லிட்டு கரியைத் தர்றீங்களே!"
"இன்றைய கரி, நாளைய வைரமாச்சே!"
 

 "தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி..."
"அதனால...?"
"அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே 'டாண்'னு எழுந்து, அதை ஆ·ப் பண்ணிடுவேன்!"

 "மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படிப் பேசக்கூடாது..."
"ஏன்...?"
"'மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க...?'னு கேட்டா, 'பல்செட் போட்றோம்'னு சொல்றாங்க!"

 "உன் புதுப் படத்துக்குப் பேரு ஏன் 'எங்கேயோ கேட்ட கதை'னு வெச்சே...?"
"எல்லாம் ஒரு தற்காப்புதான்!"

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails