Friday, 2 April 2010

Mr.மொக்கை பகுதி-3


நம் Mr.மொக்கைக்கு காது மந்தமாகிவிட்டது. செவிட்டு மிஷின் வாங்கப் போனார். கடைக்காரன் 10,000 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலையுள்ள கருவிகளைக் காட்டினான்.

10,000 ரூபாய் விலையுள்ள கருவியைக் காட்டி," இதில் என்ன சிறப்பு..? " என்று
Mr.மொக்கை கேட்டார்.

"இது லேட்ட்ஸ்ட் டிஜிட்டல் டெக்னாலஜி சார். ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் வேலை செய்யுது. எதிரில் இருக்கறவங்க எவ்வளவு மெல்லப் பேசினாலும் உங்களுக்கு கிளியரா கேட்கும். சூரிய வெளிச்சத்திலிருந்து தானே பேட்டரி சார்ஜ் ஆயிடும்..!" என்று கடைக்காரன் சொன்னான்.

அடுத்து, 100 ரூபாய் மெஷினைக் காட்டிய
Mr.மொக்கை, "இதில் என்ன சிறப்பு..?" என்று மொக்கை கேட்க கடைக்காரன் சொன்னான்..

"இதில சிறப்பும் இல்ல புண்ணாக்கும் இல்ல. இது சாதா சோப்புப் பெட்டியும் ஒரு ஒயரும்தான்..!"

அப்போ எனக்கு எப்படி இதில காது கேட்கும்..?

இதில காது கேட்காது.. ஆனா இதைப் பார்த்தா மத்தவங்க நீ ஒரு டமாரச் செவிடுன்னு தெரிஞ்சுக்குவாங்க.. அவங்களே கத்திப் பேசுவாங்க..!


Mr.மொக்கைக்கு தூக்குத் தண்டனை.. கழுத்தில் சுருக்கை மாட்டும்போது சரமாரியாக விக்கல் வந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை.. அங்கு நின்ற மருத்துவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் பலனில்லை.வேறு வழியில்லாமல் மொக்கையிடமே கேட்டார்கள்..

என்ன செய்தால் உன் விக்கல் நிற்கும்..?

கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டுவதற்காகக் காத்திருந்த ஊழியரைப் பார்த்து
Mr.மொக்கை சொன்னார்..

சட்டுன்னு..க்..க்... யாராவது..க்க்...எதையாவது க்...க்..க்.. செஞ்சு..க் எனக்கு .க்க்.. பயம் காட்டுங்க..!

ஜேசியும் சசியும் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஆட்கள்..
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சிலிண்டர் போட போனாங்க.. 4 வது மாடியில் ஒரு வீட்டுல நின்னுட்டு இருக்கும்போது மாசி கேட்டார்..

சசி .. பில் புத்தகம் கொடு..

என்கிட்ட எங்கே இருக்கு..நீதானே வச்சிருந்தே..?

இல்லே
சசி.. கேஷ் பேக்கில வச்சிருப்பே பாரு..

ஐயோ கேஷ் பேக்கா..?  கீழே ட்ரை சைக்கிள்ல மாட்டியிருக்கேனே..

அடப்பாவி.. எவனாவது திருடிட்டா என்ன பண்றது..?

இருவரும் புயல் வேகத்தில் படியில் இறங்கி கீழே ஓடினர்.. அப்போது அவர்கள் பின்னால் ஒரு ஆள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.. கீழே பேக் இருக்கவே நிம்மதி அடைந்த
ஜேசி யார் பின்னால் ஓடி வந்ததெனப் பார்க்க... அவர் மர்.மொக்கை..!

நீங்க ஏன் சார் இப்படி அலறியடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க..?
Mr.மொக்கை சொன்னார்..

ஏம்பா.. சிலிண்டரைக் கொண்டாந்து வச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடினா நான் என்னத்தை நினைக்கிறது..? சிலிண்டர் வெடிக்கப் போகுதுன்னு ஓடறீங்க போல இருக்குன்னு நானும் ஓடியாந்தேன்..!


Mr. மொக்கை பூச்செடிகள் விற்கும் கடைக்கு வந்தார்..

மஞ்சள் ரோஜாச் செடி இருக்கா..?

இல்லையே சார்.. கருப்பு ரோஜா செடி இருக்கு .. பார்க்கறீங்களா..?

இல்லப்பா.. மஞ்சள் ரோஜாதான் வேணூம்..

சிவப்பு ரோஜா செடி இருக்கு பாருங்க சார்.. பளபளன்னு இருக்கும்..
மஞ்சள் ரோஜா சோகை புடிச்ச மாதிரி இருக்கும் சார்..!

எனக்கு தெரியும்பா.. ஆனா .. " நான் ஊர்லேருந்து திரும்பற வரைக்கும்
ஒழுங்கா இந்த மஞ்சள் ரோஜாவுக்கு தண்ணி ஊத்துங்க.. ஏதாச்சும்
ஆச்சுது.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டுப் போன
என் மனைவிக்கு அது தெரியமாட்டுதே....!
 


ஒரு மனிதர் ஒரு குறும்புக்காரச் சிறுவனை அங்கு அழைத்து
வந்திருந்தார்..சிறுவனோ அங்கிருக்கும் பொருள்களைத் தள்ளுவதும்,
தூக்கி எறிவதுமாக இருந்தான்..

அந்த மனிதர் அடிக்குரலில் உறுமினார்..

Mr.மொக்கை.. கம்முன்னு வா.. அசிங்கமா நடந்துக்காதே..

மீண்டும் மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க,
தந்தையும் ....

வேண்டாம் Mr.மொக்கை..

கூடாது மொக்கை..

அப்புறம் அடி விழும்..அசிங்கமாயிடும் மொக்கை..

என்று கூறியவாறே இருந்தார்..
இவ்வளவையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து கவனித்துக் கொண்டே
இருந்தாள்.. கடைசியாக சொன்னாள்..

ஆனாலும் நீங்க ரொம்ப டீசண்ட்.. பொது இடத்துல அடிக்கக் கூடாதுன்னு
எவ்வளவு பொறுமையா இருந்தீங்க.. [பையனைப் பார்த்து..]
ஏம்பா
மொக்கை.. நீ இவர் பையனா..?

பையன் சொன்னான்..

நான் அவர் பையந்தான்.. ஆனா
Mr.மொக்கைங்கறது என் பேர்
இல்லே.. எங்க அப்பா பேரு..!


Mr. மொக்கையும் நண்பரும் பஸ்வண்டியில் சென்றுகொண்டிருந்தார்கள். எதிரில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இவர்களைப் பார்த்து இந்தியில் கேட்டார்..
தேரா நாம் க்யா..?
இருவரும் விழிக்க, அடுத்து மலையாளத்தில் கேட்டார்..
நிங்கள்ட நாமம் ஏதானு..?
இதுவும் புரியாமல் போகவே, பயணி கன்னடத்தில் வினவினார்..
நிம்ம ஹெசுரு ஏனு..?
இதற்கும் அருள் வடிவாக
Mr.மொக்கை & கோ விழிக்கவே மனம் தளராத பயணி கேட்டார்..
மீ பேரு ஏமி..?
இதற்கும் பதில் இல்லை.. பயணி சோர்ந்துபோய் வேறுபுறம் திரும்பிக்கொண்டார்.
Mr.மொக்கை நண்பரிடம் சொல்லலானார்..
இதுக்குதான் நான் எப்போவும் சொல்லிட்டு இருக்கேன்.. நமக்கு தமிழ் மட்டும் போதாது.. இன்னொரு மொழி கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்ன்னு..!
நண்பர் சொன்னார்..
எதிரே இருக்கற ஆள்கூட 4 மொழி பேசறார்.. என்ன புண்ணியம்..? வேலைக்காகாம வெறுத்துப் போயி உக்காந்திருக்கார் பாரு..!


Mr.மொக்கை ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். Mr.மொக்கையாருக்கும் அவரது முதலாளிக்கும் இருந்த பனிப்போர் காரணமாக, இம்முறை போனஸ் (எல்லாப் பிடித்தங்களும் போக,) 200 ரூபாய்தான் வந்தது. இதனால் வெகுண்ட Mr.மொக்கை, முதலாளி குறித்து இல்லாததும் பொல்லாததுமாக முதலாளியின் மனைவியிடம் வத்தி வைத்துவிட்டார். வத்தி புகைந்து வெடித்து பெரும் பிரச்னை ஆகிவிடவே, பயந்துபோன Mr.மொக்கை ஒரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கப் போனார்.

எல்லா விவரத்தையும் கவனமாகக் கேட்ட பாதிரியார் சொன்னார்..

"மகனே.. நீ பெரும் பாவமிழைத்துவிட்டாய்.. உடனே 7 எலுமிச்சம்பழங்களை ஒரு கிளாஸ் தண்ணீரில் பிழிந்து அதைக் குடி..!

அதைக் குடித்தால் என் பாவங்கள் கழுவப்பட்டுவிடுமா ஃபாதர்..?

அது எனக்குத் தெரியாது.. ஆனா ஒரு குடியக் கெடுத்துட்டு பாவமன்னிப்பு கேட்க வந்திருக்கும்போதுகூட உன் முகத்தில் தெரியுதே.. ஒரு இளிப்பும் சந்தோஷமும்.... அது முதலில் ஓடிப்போகும்..!
Mr. மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி வெந்தது பாதி.. வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார். அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு 1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது. கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..

தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே.. ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?


இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?


பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?


கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின் மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்....


" 6 பேருக்கு தேவையான உணவு.."


என்று இருந்தது..!


Mr.மொக்கை மாரத்தான் பந்தயத்தில் கடைசி ஆளாக ஓடிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் ஓடும் ஆள் கேட்டான்..

எல்லோருக்கும் பின்னால வர்றியே.. உனக்கு வெட்கமா இல்லையா..?

அவசியம் உனக்கு அது தெரியணுமா..? என்று கேட்ட
Mr.மொக்கை, பந்தயத்திலிருந்து உடனே விலகிவிட்டார்.


Mr.மொக்கை வீட்டுக்கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்த அவரிடம் ஏதோ புத்தகத்தை நீட்டி நன்கொடை கேட்கவே, மொக்கை கதவை அறைந்து சாத்தினார். ஆனால் கதவு திறந்து கொண்டது. சரியாக சாத்தவில்லை என்று நினைத்த Mr.மொக்கை இன்னும் பலமாக கதவை மூட, முன்னிலும் வேகமாக கதவு எதிர்த்து வந்தது.

வெளியே நிற்கும் ஆட்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்த
Mr.மொக்கை, அவர்களை இரண்டில் ஒன்று பார்க்கும் முடிவுடன் கதவை அகலத் திறந்து அடித்து மூட முயலும்போது வெளியில் நின்றிருந்தவர்களில் ஒருவர் சொன்னார்..

கதவை சாத்தறதுக்கு முந்தி உங்க நாய்க்குட்டியை தூக்கிக்குங்க சார்..!

 

Mr.மொக்கை ஒருநாள் கடவுளைக் கண்டார்..

கடவுளே, எனக்கு ஒரு அரசாங்க வேலை வேண்டும். ஒரு பை நிறையப் பணம் வேண்டும்.. என்னைச் சுற்றி நிறையப் பெண்கள் எப்போதும் இருக்கவேண்டும்.. அப்படி ஒரு வரம் தா கடவுளே..!

அப்படியே ஆகட்டும் மகனே..!
Mr.மொக்கைக்கு, பல்லவன் மகளிர் மட்டும் பேருந்து நடத்துனர் வேலை கிடைத்தது..!

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails