
அடுத்து சர்தார் ஜீயிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. பதிலை தான் மறு நாள் கூறுவதாக வாக்களித்தார் சர்தார் ஜீ. வீடு திரும்பிய சர்தார் ஜீ யின் மனைவி கேட்டார் “எப்படி இன்டாவியூ?”.
“ம்...! எனக்கு உடனெயே வேலை கிடைத்து விட்டது. நான் இப்பொது ஒரு கொலைபற்றி துப்பறிந்துகொண்டு இருக்கின்றேன்”.
ஒரு தடவை சர்தரர் ஜீ தற்கொலை செய்ய முடிவு செய்தார். கையிலே சிறிது வைன் மற்றும் பாண் என்பவற்றுடன் சென்றார். இவரை மறித்த ஒரு நபா கேட்டார். “எதுக்கு தற்கொலை செய்யும் உங்களுக்கு உணவு வகை?”
“இந்திய இரயில்களை நம்ப முடியாது. நேரத்திற்கு வராவிட்டால் நான் பட்டினியால் இறக்க நேரிடும்”.

சர்தார் ஜீ தன் வாழ்க்கையில் இரயில் வண்டியைப் பார்த்ததில்லை. ஒரு நாள் மும்பாய் இரயில் நிலையத்தில் நின்றபோது ரயில் தடத்தைப் (Track) பார்த்தார்.
ஒன்றும் விளங்காத சர்தார் ஜீ அதன் நடுவால் நடந்து போனார். அப்போது அங்கு வந்து இரயில் ஒன்று சர்தார் ஜீயை அடித்துத் தள்ளியது.
நல்ல வேளையாக சார்தார் ஜீ சிறிய காயங்களுடன் தப்பினார். சில நாட்கள் கழிந்து சர்தார் ஜீ தன் நண்பர் வீட்டுக்குச் சென்றார். நண்பர் வீட்டு சமயலறையில் தண்ணீர் கேத்தல் விசிலடித்தது. அருகிலிருந்த இரும்புக் கம்பியால் தண்ணீர் கேத்தலை அடித்து நொருக்கினார் சர்தார். சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த நண்பர் எதற்காக இப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு சர்தார் ஜீ கூறினார்
“இந்த சாமான்களை சின்னதாக இருக்கும் போதே அழித்து விடவேண்டும் எனக் கூறினார்”.
சர்தார் ஜீ மீண்டும் ஒரு நாள் இரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு பயனியிடம் கேட்டார்.
சர்தார் ஜீ : இராஜஸ்தான் எக்பிரஸ் இவ்விடத்தால் செல்லுமா?
பயனி : மதியம் 12.30 க்குச் செல்லும்
சாதார் ஜீ : அப்போ பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்குச் செல்லும்?
பயனி : 10.30
சர்தார் ஜீ : சரி! சரி! அப்பிடியானால் மும்பாய் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு?
இவ்வாறு தொடர்ந்து கேள்வி கேட்டதால் மிகவும் கோபமடைந்த பயனி கேட்டார்
பயனி : நீங்க பஞ்சாப்புக்குத்தானே போகவேண்டும்?
சர்தார் ஜீ : இல்லை இந்த இரயில் தடத்தை (Track) கடக்கவேண்டும்
சர்தார் ஜீ வீட்டு தொலைபேசி ஒலித்தது
“ஹலோ! இது இரண்டு இரண்டு இரண்டு இரண்டா?” குரல் கேட்டது
சர்தார் ஜீ : இல்லை இது இருபத்தி இரண்டு இருபத்தி இரண்டு
குரல் : இந்த இரவிலே உங்களை எழுப்பியதற்கு மன்னிக்கவும்
சர்தார் ஜீ : பரவாயில்லை எப்படியும் இந்த நேரம் என் நண்பன் ஒருவன் அழைப்பு எடுப்பதாக கூறினார்
சர்தார் ஜீ இரு காதுகளிலும் நெருப்புக் காயங்கள்ளுடன் ஒரு வைத்தியரிடம் வந்து சேர்ந்தார்.
வைத்தியர் : என்ன இது! எப்படி ஏற்பட்டது இந்தக் காயம்?
சர்தார் ஜீ : நான் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தபோது என் நண்பன் ஒருவன் தொலைபேசி அழைப்பை எடுத்தான். நான் மாறி தொலைபேசி என்று இஸ்திரிப் பெட்டியை காதில் வைத்து விட்டேன்
வைத்தியர் : அப்போ மற்றக்காதில் எப்படி?
சர்தார் ஜீ : அந்த முட்டாள் மீண்டும் தொலைபேசி அழைப்பை எடுத்தான்.
சர்தார் ஜீ ஒரு நாள் தன் உறவினரின மரணச் சடங்கிற்கு தொலைநோக்கியுடன் சென்றார். ஏனெனில் இறந்தவர் சர்தார் ஜீ யின் தூரத்து உறவினன் ஆவார்.
சர்தார் ஜீ தன் நண்பருடன் உரையாடினார்
சர்தார் ஜீ : நான் பஞ்சாப்பில் பிறந்தேன்
நண்பர் : அப்படியா? எந்தப் பகுதி?
சர்தார் ஜீ : என் முழுப்பகுதியும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது
ஒரு தடவை உலகின் பிரபலமான நிவ் யார்க் காவல் துறை,
ஸ்கொட்லண்ட் காவல் துறை மற்றும் சர்தார் ஜீ தலைமையில் பஞ்சாபிய காவல் துறை ஆகியன தம்மில் சிறந்த காவல் துறை அமைப்பைக் கண்டறிய ஒரு போட்டி வைத்தனர்.
போட்டியின் படி அருகிலிருந்த காட்டினுள் சென்று ஒரு சிங்கத்தைக் கட்டி யிழுத்து வரவேண்டு்ம். முதலில் நுழைந்தது ஸ்கொட்லாண்ட் காவல் துறை. சரியாக ஒரு மணி நேரத்தில் ஒரு திடகாத்திரமான ஆண் சிங்கத்தைக் கட்டியிழுத்து வந்தனர். அடுத்து நுழைந்தது நிவ்யார்க் பொலீஸ் டிபார்ட்மென்ட் (NYPD) சுமார் 15 நிமிடத்தில் ஒரு சிங்கத்தைப் பிடித்து வந்தனர். இறுதியில் நம்ம சர்தார் ஜீ தலைமையிலான பஞ்சாப் அணி களமிறங்கியது. சுமார் 3 மணி நேரம் கடந்தும் பஞ்சாப் அணி வராததால் கவலையுற்ற ஏனைய அணிகள் பஞ்சாப் அணியைத் தேடி காட்டினுள் நுழைந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் சர்தார் ஜீ சத்தம் போட்டுப் பேசுவது கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது. சர்தார் ஜீ குழுவினர் ஒரு கரடியை மரத்தில் கட்டிவைத்திருந்தனர்.
சந்தர் ஜீ சத்தமிட்டார் “ம்....! ஒத்துக்கொள் நீ ஒரு சிங்கம்! சரியா?”.
No comments:
Post a Comment