Tuesday 16 February 2010

அயன்!!!

தூங்கி எழுந்து வந்த ரமேஷ் துண்டுடன் நிற்கும் விவேக்கை பார்த்து, "ஏண்டா காலங்காத்தால இப்படி மும்தாஜ் மாதிரி நிக்குற?" என்றான்.
"நம்ம ரூம் சாஜகான் என்னை இப்படி நிக்க வெச்சுட்டான்"
"ரூம் சாஜகான்? யாரு நம்ம பிரகாஷா?"
"என்ன நம்ம பிரகாஷ்? நீ அவன் கூட்டாளியா? ஊருக்குள்ள இப்படி சொன்ன நீ செத்த!!"
"ஏன் டா?


"இன்னைக்கு சார் ப்ரொபோஸ் பண்ண போறார்... நான் ரெண்டு நாள் என் அத்தை வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்!!"
"ஹ ஹ ஹ .. இன்றுடன் ஒழிந்தான் துரோகி.."
"நண்பா.. பிரகாஷு.. இந்த முடிவ நீ மாத்திகாத.. நீ போய்டா இங்க எல்லாத்தையும் நான் பார்த்துகறேன்.. அப்புறம் போன வருஷம் செத்த எங்க தாத்தாவ கேட்டதா சொல்லு.." என்று குளித்துகொண்டிருபவனுக்கு கேட்கும் படி கத்தினான்.
"போங்க டா இவனுகளா.. சாய்ந்தரம் அவள நம்ம ரூமுக்கு கூட்டிட்டு வந்து, 'இனி இவனுக தான் உன் அண்ணன்கள்'னு உங்கள அறிமுகபடுத்துனா என்ன தருவீங்க ? "
"கவலையே படாத வீங்க வீங்க தருவோம்.."
"இது நடந்தா நான் தீ குளிக்கிறேன்.. ஆனா எந்த கட்சியும் என்ன சொந்தம் கொண்டாடாம பாத்துகோங்கடா?"
"தம்பி அரசியல் எல்லாம் வேண்டாம்.. நீ ஏன் தூண்டோட நிக்கற?"
"டேய் அவன் குளுசுட்டு வந்துடான் டா.. சரி குளிக்கலாம்னு போனேன்.. அதுக்குள்ள மறுபடியும் பூந்துட்டான்..
காதல்னா சும்மாவா? இன்னைக்கு நீ குளிக்கலைன்னு யார் அழுதா? கிளம்பு கிளம்பு.. இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும்.."
"அரை மணி நேரமா? இன்னும் அஞ்சு நிமுசத்துல வரல, வெளி தாழ்பாள் போட்டுட்டு வெளிய போய்டுவேன்.. வந்தாச்சு டா.. காதலிக்க போகும் போது இம்ச பண்ணறது உங்கள விட்டா வேற ஆள் இல்ல டா.. என் காதலுக்கு நீங்க தான் வில்லன்.."
"ஹீரோ காதலுக்கு தான் வில்லன்.. காமெடியன் காதலுக்கு ஏது டா வில்லன்?" என்று சொல்லிய வாரே குளிக்க சென்றான் விவேக்!!
"நான் தான் வில்லன்.. பொண்ணோட அண்ணன்னு சொல்லி நீ என்னை அறிமுகம் செய்.. அடுத்த நிமுசம் உன்ன அடுச்சு கொல்லறேன்.. ஆன்டி-கிளைமாக்ஸ் .. நல்லா இருக்கா ? ஆன்டி கிளைமாக்ஸ், சித்தப்பா கிளைமாக்ஸ் னு மொக்க போடாம இந்த டிரஸ் நல்லா இருக்கானு பாத்து சொல்லு.."
"சரி நான் டீ சாப்பட போறேன்.. வரும் போது கிளம்பி போயிரு.."
"பதில் சொல்லு டா.."
"Bye Bye டா.."

ரமேஷ் திரும்பி வரும்போது, வேற சட்டையை தேய்த்து கொண்டிருந்தான் பிரகாஷ்.. பின்னாடி குளித்து முடித்து ஈர துண்டுடன் கடுகடுவென நின்று கொண்டிருந்தான் விவேக்..
"டேய் நீ இன்னும் போகலையா?"
(பதில் சொல்லாமல்...) "இந்த சட்ட நல்லா இருக்கா?"
நீ முதல் போட்ட சட்டையே நல்லா இருந்துது.. அதை ஏன் மாத்தின?"
"டேய் நீ வேற சும்மா இரு.. திருப்பியும் மொதல இருந்து ஆரம்பிக்காத.. இது எட்டாவது சட்டை.. ஹி ஹி ஹி .."
"சிரிக்காத.. ஒரு சட்டையையும் ஒரு பேன்டையும் வேற பொசிக்கிட்டான்.."
"விடு காதலுக்கு ஒரு சட்ட தியாகம் செய்யட்டும்.."
"அவன் செய்யட்டும்.. சட்ட என்னுது.. பேன்ட் உன்னுது.."
"டேய்.. நீ அடங்கவே மாட்டியா?"
"டேய் நண்பனுக்காக ஒரு டிரஸ் தியாகம் செய்ய மாட்டீங்களா?"

"நண்பனுக்காக செய்வோம் உனக்காக செய்ய மாட்டோம்"

"டேய் உன் காதலும் இப்படித்தான் பொசுங்கும்.. இதைத்தான் இந்த சம்பவம் காட்டுது.."
"நண்பா .. என்னோட டிரஸ் ஒன்னுமே பொசுங்களையே.. எனக்கு இது நல்ல சகுனம்.. உங்களுக்கு தான் கெட்ட சகுனம்..
இந்த வியாக்கானம் எல்லாம் பேசு.. ஏதோ உண்மையான காதல்னா கூட பரவால.. நீ இப்படி ப்ரொபோஸ் பண்ண போறது இது பதினெட்டாவது தடவை.."
"ஏன் பதினெட்டாவது தடவை ப்ரொபோஸ் செஞ்சா உண்மை காதல் இல்லையா ?"
"பாரு பாரு.. ஒரே பொண்ணுக்கு பதினெட்டு தடவை ப்ரொபோஸ் செஞ்சா மாதிரி பேசறான்.."
"டேய்.. இது முன்னாடி மாதிரி இல்ல டா.. அப்போ எதோ நான் சின்ன பையன்.. இப்போ அப்படி இல்ல டா.."
"ஏன் டா போன வாரம் தான் கடைசியா ப்ரொபோஸ் செஞ்ச.. அதுக்குள்ள வளந்துட்டியா?"
"மச்சி கடைசியா ப்ரொபோஸ் செஞ்சு ஒரு வாரம் ஆச்சா டா? பாரேன் நாட்கள் எவ்வளவு சீக்கிரமா போகுதுன்னு.."
"பாரேன் ஒரு வாரம் ஆனதுக்கு பீல் பண்ணறான்.."
"டேய் உன்னோட பனிரெண்டாவது காதலியோட அண்ணன் ரவி இவளோட கிளாஸ் மேட்.. பாத்துக்கோ.."
"டேய் நீ ஏன் டா அவன் காதலிகளோட டீடைல்ஸ் collect பண்ணற?"
"டேய் நீ வேற, இன்னொரு தாட்டி இப்படி சொல்லாத.. அப்புறம் நம்ம சாஜகான் அவன் அழகான பொண்ணுங்கள தான் லவ் பண்ணறான்னு நினைப்பு வந்துரும். சீன் தாங்க முடியாது!!"
"டேய் காதல் அழக பாத்து வரது இல்ல டா!! மனச பாத்து வரது!!"
"மண்ணாங்கட்டி, பஸ் ஸ்டாப் ல இருந்து லுக் விட்டதுல எப்படி டா மனசு தெருஞ்சுது?"
"சரி உங்க கிட்ட பேசுனா இந்த லவ்வும் அவ்வளவு தான்!! நான் கிளம்பறேன்.. இவுனிங் பாக்கலாம்.."
"நீ உயிரோடா இருந்தா பாக்கலாம் டா.. அந்த பொண்ணோட அண்ணன் போலீஸ்.."
"நிஜமாவா சொல்லற ?" ஷூ போட்டு கொண்டிருந்த விவேக் ஷாக் ஆகி அருகில் வந்து கேட்டான்..
"ம்ம்"
"இத்தன நேரம் சொல்லவே இல்ல?"
"இவரு பெரிய பப்ளிக் பரோஸ் பிராசிகியூட்டர்.. குறுக்கு விசாரணை செய்யறார்.."
"நிஜம்டா.. நம்பு.."
"சரி டா.. நான் ப்ரொபோஸ் பண்ணறேன்.. ஒகே ஆச்சுனா இந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க.. இல்லைனா அந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க.."
"மாமியார் வீடு எல்லாம் வேண்டாம் டா.. டைரெக்ட்டா மார்ச்சுவரி வரட்டா?"
"ஏன் டா.. உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா??"
"நல்ல காதலுக்கு தான் டா நல்ல வார்த்த, நொள்ள காதலுக்கு இது போதும் போ!!"
(காரி உமிழ்ந்து பிரகாஷ் நெற்றியில் திலகமிடவது போல் செய்கை செய்து சொன்னான் ரமேஷ்!!)
"ஆல் த பெஸ்ட் டா!!"
**********

போய் ஒரு ரெண்டு மணி நேரத்தில் திரும்பி வாந்தான் பிரகாஷ்.. முகத்தில் புன்னகையுடன்..
அவன் இவ்வளவு இளித்து நண்பர்கள் பாத்ததே இல்லை.. என்ன நடந்தது என்று எவ்வளவு கேட்டும் சொல்லவே இல்லை..
"டேய் நீயா இவ்வளவு அமைதியாய் இருக்க?" என்று கேட்டும் கூட பதில் சொல்லவே இல்ல.. மெலிதாய் ஒரு புன்னைகை மட்டும் உதிர்த்தான்.. அந்த புன்னகை அவன் சந்தோசத்தை நண்பர்களுக்கு உணர்த்தியது.. காதல் மௌனமும் கத்துக்கொடுக்கும் போல..

(எங்க போறீங்க, கத முடியல முழுசா படியுங்க!!)
"ஏன் டா, காதல் செஞ்சா இப்படி ஆஃப் ஆகிடுவாங்களா?"

"நமக்கு என்ன அத பத்தி தெரியும்?"
அடுத்த நாள்...

ஆள் நடமாடும் சத்தம் கேட்டு எழுந்த விவேக், பிரகாஷ் -ஐ பார்த்து அதிர்ந்தான்.. அதிர்ச்சியுடன் ரமேஷை எழுப்பினான்.. ரமேஷும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்..
காலை ஆறு மணிக்கு பிரகாஷ் குளித்துவிட்டு, நீட்டாக அயன் செய்த டிரஸ் போட்டுகொண்டு.. பல் தேய்த்து கொண்டிருந்தான்!
பிரகாஷ் அதிர்ந்ததுக்கு கூடுதல் காரணம் அவன் புது சட்டை பொசுங்கி கிடந்தது.. முதலில் ரமேஷ் சுதாரித்து, "என்ன டா பண்ணற?"
"இல்ல டா, நேத்திக்கு நான் போகும்போது வித்யாவை பார்த்தேன் டா, ஒரு பிச்சகாரனுக்கு காசு போட்டா.."
"அதனால இன்னிக்கு நீ போய் பிச்சை எடுக்க போறியா?"

"ஏண்டா இப்படி வினோதமா ஏதேதோ செய்யரனு கேட்டா, எதேதோ சொல்லற?"

"முழுசா கேளுங்கடா, பஸ் ஸ்டாண்ட் பக்கதுல இருக்குற பிள்ளையார் கோயில் வாசல் பிச்சகாரங்களுக்கு பிச்சை போட்டு, உள்ளே போனா.. நானும் பின்னாடியே போன்னேன்.. அவ சாமிய சுத்திவரதுகுள்ள குருக்கள் உள்ளே போய்ட்டார்.. அவ வந்து கூப்டும் அவரு வரல.. அவ கண்ண மூடி சாமி கும்பிடும்போது பக்கத்துல போய், அவளுக்கு குங்குமம் வெச்சேன்.. அவ கண்ண தொறந்து என்ன பாத்தா.. நான் அவள பாத்தேன்.. ரெண்டு பேர் மூஞ்சியும் கிட்டத்துல.. நான் அவ கண்ண பாத்தேன்.. அவ ஏன் கண்ண பாத்தா.. நான் மெதுவா ஐ லவ் யு னு சொன்னேன்.. அப்போ தான் டா அவ மனசுல இருக்கறத எந்த தயக்கமும் இல்லாம சொன்னா.."

"என்னடா சொன்னா? ஓகே சொல்லிடாளா?"

"கோயிலுக்கு வரதும் தப்பு இல்ல, ப்ரொபோஸ் செய்யறதும் தப்பு இல்ல.. ஆனா இது எல்லாம் பல்ல தேய்ச்சுட்டு வந்து பண்ணுங்கன்னு சொன்னா டா.. பாரேன் நேத்திக்கு நிறைய தடவ குளுசேன், ஆனா பல்லு வெளக்க மறந்துட்டேன்.. Bad Luck டா.. நீங்களும் ப்ரொபோஸ் செய்யறதுக்கு முன்னாடி பல்லு தேய்ச்சுட்டு போங்க டா!!"

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails