Wednesday 10 February 2010

முன்னெச்சரிக்கை எப்பயும் வேணும்


இந்த மாதிரி முன்னெச்சரிக்கை பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க......


  • சில பேர் வீட்டை விட்டு வெளிய போகும் போது கதவை பூட்டி விட்டு, சிறிது தூரம் சென்ற உடன் திரும்பி வந்து கதவை ஒழுங்கா பூட்டியாச்சா என்று கதவு உடையும் அளவுக்கு தொங்கி (இழுத்து) பார்ப்பார்கள். இது ஒரு போபியா தான். ஆனா நல்ல விஷயம் தான் ஒரு தடைவைக்கு பத்து தடவ கூட செக் பண்றது தப்பு இல்லை.

  • சில பேர் பைக் சைடு லாக் பண்ணிட்டு அத ஒரு மூணு நாலு தடவ ஒடிச்சு பாப்பாங்க,அவங்க ஓடிக்கிற ஓடியிலியே லாக் ஸ்க்ரு கொஞ்சம் கொஞ்சமா கழண்டு லூஸ் ஆகிடும். அப்புறம் அதுவே பைக் திருடுபவனுக்கு பாதி வேலையை நாமே குறைத்த மாதிரி தான்



  • சில பேர் ஹோட்டல் உள்ளே செல்லும் போது, சாப்பிடும் போது அடிக்கடி பர்சையோ இல்ல பாக்கெட்யோ தொட்டு பார்த்து கொண்டே சாப்பிடுவார்கள். இதுவும் ஒரு விதமான முன்
எச்சரிக்கை தான். ஒரு வேலை காசை வீட்லயே வச்சிட்டு வந்து நல்ல சாப்பிட்டு ஹோட்டல்ல டேபிள் கிளீன் பண்ணாம தப்பிச்சிக்கலாம்.
  • மேலே கூறியவை சாதரணமாக நாம் பின்பற்றுபவை, கிழே வாங்க
நான் உங்களுக்கு சில ஐடியா தரேன்.
******************
  • முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி.....உங்களுக்கு சில ஐடியாக்கள்

  • நீங்க கிழே உள்ள படத்தை பாருங்க நம்ம ஆளு காரை எப்படி
பாதுகாப்பா பூட்டு போட்டு வச்சிரிக்காரு.....




சரி இதெல்லாம் விடுங்க ஜுஜுபி மேட்டர்.... ஆனா கிழே உள்ள படத்தை பாருங்க...
  • (பி.கு:கொஞ்சம் ஓவர்ஆ இல்ல....அந்த ஐம்பத்து ரூபாய் செருப்புக்கு ஐந்நூறு ரூபாய் பூட்டு.இந்த செருப்பை இப்படி பூட்டி வச்சவரு உண்மையலே பயங்கர முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆளா இருப்பார் போல.)


(எவனோ கல்யாண வீட்ல செருப்பை பறிகொடுத்தவன்
போட்டோ எடுத்து போட்டுருகான்னு நினைக்கிறேன்.)

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails