Wednesday, 10 February 2010

சர்தார்ஜி ஜோக் பகுதி 4


 நம்ம சர்தார் கோழிப்பண்ணை வச்சார்.. முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார் விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு.. ஆச்சரியப்பட்ட கோழிக்குஞ்சு சப்ளை பண்றவர் கேட்டார்...

"என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு..?"
"எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது.."
" என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா..?"
" அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்..மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்.. !"
" என்னது..? மண்ணா..?"
" ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது.. அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது...!!!!!!" 
கடைக்காரன் தலை சுத்தி விழுந்தான்
என்ன சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை 

கண்டக்டர் சர்தாருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு தொல்லை இருந்தது.. வைத்தியரைப் போயி பாக்க.. அவரும் கொஞ்ச மாத்திரைகளைக் கொடுத்து திங்க சொன்னார்.. இருந்தாலும் பலன் இல்லே..
"என்னாய்யா வைத்தியரு நீ..? ஒண்ணும் குணமாக மாட்டேங்குதே..?"
" மூதேவி.. ஸ்டாப்பிங்குல விசில் ஊதும் போது மெதுவா ஊதித் தொலை.. உசிரக் குடுத்து ஊதிப்புட்டு இங்க வந்து என் உசுர வாங்காதே..!" 


சர்தார்ஜி டர்பன் இல்லாமல் சென்று கடைக்காரரிடம் கேட்டார், "ஏங்க பஞ்சாப் கோதுமை குடுங்க"
கடைக்காரர்: நீங்க பஞ்சாப் சர்தார்ஜியா?
சர்தார்: ஆமாம். ஏன்? ஆந்திரா அரிசி கேட்டா நீங்க ஆந்திரான்னு கேப்பீங்களா?
க.காரர்: இல்லையே.
சர்தார்: பின்ன என்னை மட்டும் ஏன் பஞ்சாப் சர்தார்ஜியான்னு கேட்ட?
கடைக்காரர்: ஏன்னா, இது துணிக்கடை..!ஒரு தடவை 3 சர்தார்ஜிங்க ஆற்றுக்கு அந்தப் பக்கமா மாட்டிக்கிட்டாங்க.. என்ன
செய்யறதுன்னு தெரியலே.. கடவுளை வேண்டுனாங்க.. கடவுளுக்கு வேறே முக்கியமான ஜோலி
இருந்ததாலே ஒரு கந்தர்வனை அனுப்பினாரு.. அவன் 3 சிங்கு முன்னால தோன்றி ஆளுக்கு
ஒரு வரம் கேளுங்க ன்னான்..
முதல் சிங்கு, ஆத்துக்கு அந்தப் பக்கம் என்னோட அறிவை பயன்படுத்திப் போகணும்..
அதுக்கு வழி சொல்லு" ன்னு கேட்க..
அதுக்கு கந்தர்வன்.. "ஆகற வழியப்பாரு.. வேறே ஏதாவது உருப்படியா கேளு" ன்னான்..

சிங்கு," அப்படின்னா என்னை தெலுங்கு காரனா ஆக்கிடு" ன்னாரு. உடனே கை ரெண்டும்
வலுவா மாறிடுச்சு.. சொய்ங் ன்னு தண்ணியில குதிச்சு நீச்சல் அடிச்சுப்
போயிட்டான்..
ரெண்டாவது ஆள், " என்னை மலையாளத்தானா மாத்திடு" ன்னு சொல்ல உடனே உடம்பு வலுவா
ஆயிடுச்சு.. பக்கத்தில இருந்த மரத்த ஒடைச்சு தெப்பம் செஞ்சு அதுல ஏறிப்
போயிட்டாரு..
மூணாவது சிங்கு," என்னை தமிழனா ஆக்கிடு... ன்னாரு. உடனே புத்தி வலுவா
மாறிடுச்சு.. பக்கத்துல இருந்த பாலத்து வழியா அக்கரைக்குப் போயிட்டாரு..!


அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பி கஞ்சா சிங்கும் ஒரு
குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு.. அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன்
குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு.. ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்.. 

அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்டி விட. இன்னொரு குதிரை காதையும்
வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.
அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு.. 

" கவலைப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!


சர்தார் திரைப்படம் பார்க்க சென்றார்.. தாமதமாகி விட்டதால் போகக் கூடாத
ஒருவழிப் பாதையில் மகிழ்வுந்தைச் செலுத்தவே, போக்குவரத்துக் காவலரால் மடக்கி
நிறுத்தப் பட்டார்..
காவலர் ; என்னாய்யா சிங்கு.. எந்த ரோட்லே போற தெரியுதா..?
சர்தார் ; தெரியுமே.. சினிமா கொட்டாய் ரோடு.. ஆனா ஏன் எல்லா காரும் திரும்பி
வந்துகிட்டு இருக்கு..? டிக்கெட்டு தீந்து போச்சோ..?


நம்ம சர்தார் பெயிண்டர்..( சுண்ணாம்பு அடிக்கறவர்.. ). ஒரு வீட்டுக்காரர்
அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார்..
"வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே(சுவர்ல) சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன
கேக்கறே..?"
"நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. "
ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. வீட்டுக்காரர் 100 ரூபாய்
கொடுத்தார்..சிங்கு திருப்தியுறாமல் கேட்டார்..
"பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க "
செவர்லே "ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா "குவாலிஸ் "
நின்னுக்கிட்டுருந்துச்சு..!


உடல்நிலை கொஞ்சம் மோசமானதால் சர்தார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்..
"டாக்டர்.. எனக்கு உடனே ஃப்ரெஞ்ச் மொழி கத்து தர ஏற்பாடு பண்ணுங்க.."
"ஏன்..?"
" சொர்க்கத்திலே ஃபிரெஞ்ச் தான் பேசுவாங்களாம்.."
" சொர்க்கத்துக்கு தான் போகப் போறீங்கன்னு எப்படி உறுதியா சொல்றீங்க..?"
" நரகத்துக்குப் போனா ஒண்ணும் பிரச்னை இருக்காது.. எனக்குதான் பஞ்சாபி நல்லா
தெரியுமே..!சர்தாஜிக்கு அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி சர்தாஜி கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான்.சர்தாஜியின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்.

 
சர்தாஜி யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails