Friday, 19 February 2010

Mr.மொக்கை

mrs.மொக்கை : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?
Mr.மொக்கை : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!

MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..
"என்னா மேன்.. உன் mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!
மொக்கை பதிலளித்தார்..

 
கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!

"என்ன மொக்கை... பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"
"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."Mr.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..
"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"
குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. mr.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்..
"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"
மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..
"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?
ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!திருமதி.மொக்கையும், ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..
அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!
திருமதி. மொக்கை சொன்னாள்..
கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்தவேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!மிஸ்டர்.மொக்கை தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார். அது ஒரு இடைநில்லா வானூர்தி.சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. விமானிகள் அறையிலிருக்கும் ஒலிவாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், ஒரு விமானி மற்றவரிடம் சொன்னார்..
ரொம்ப களைப்பா இருக்குப்பா..! இந்த மீட்டர்களையும், மானிட்டர்களையும் பார்த்து பார்த்து அலுத்துப் போயிடுச்சுப்பா.. ஒரு ஸ்ட்ராங் காப்பியும், ஒரு அழகான பொண்ணும் இப்போ இருந்தா.. அவள் மடியில் படுத்துகிட்டு காபியை அனுபவிச்சு குடிப்பேன்..!
இந்த உரையாடல் பயணிகள் பகுதியில் தெளிவாக ஒலிபரப்பு ஆவதைக் கவனித்த ஒரு விமானப் பணிப்பெண் விமானிகளை எச்சரிப்பதற்காக அவசரமாக விமானிகள் அறையை நோக்கி ஓடினாள்..
இதைக் கவனித்த மொக்கை சொன்னார்..
"மிஸ்.. காபியை மறந்துட்டுப் போறீங்களே.. அதையும் எடுத்துட்டு போங்க..!"


மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..
"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"
"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"


மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!


மொக்கையின் நண்பர் : அந்தக் கட்சிப் பத்திரிகையில் வேலை செய்துகிட்டு இருந்தியே.. இப்போ திடீர்ன்னு நிறுத்திட்டாங்களாமே.. என்ன ஆச்சு..?
மொக்கை : 'தலைவர் பதிலளிக்கிறார்'ன்னு அச்சுக் கோக்கறதுக்கு பதிலா, 'தலைவர் பல்லிளிக்கிறார்'ன்னு கோத்து தொலச்சிட்டேன்..

நம்ம சர்தார்ஜி ஜோக் பதிவு போட்டா ஏக பட்ட பிரச்சனை அதனால் தான் இப்படி எப்புடி

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails