(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)
(இந்த படம் கூறுவது என்னன்னா "நாங்க ஓசில பினாயில் குடுத்த கூட குடிப்போம்")

இப்போ இருக்குற டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைத்து நான் வசிச்ச பதிவு ஒன்றை போஸ்ட் செய்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.
******************
முன்னுரை:
----------------
- "வருஷம் முழுவதும் விடாம உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் நம்ம கில்மானந்தா.
விளக்கம்:
-------------
அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.
**************
முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:
பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இருபது ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இருபது ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....
அதனால இந்த ஐடியா
ஐடியா நெ.1:
----------------
- உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.
ஐடியா நெ.2:
----------------
- அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.
(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).
******************
உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஐடியா நெ.3:
---------------
- மச்சான் உன் ஆளு இன்னிக்கு upo படத்துக்கு போறதா தகவல்
"மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.
நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.
எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.

- சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
ஐடியா நெ.4:
---------------
கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்.
எச்சரிக்கை நெ.2:
---------------------
பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.
எச்சரிக்கை நெ.3:
---------------------
சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.
(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)
No comments:
Post a Comment