Wednesday, 10 February 2010

மன்னர்களின் ஜோக்கள் சில


ஆயிரத்தில் ஒருவன் பார்த்ததின் விளைவு இந்த நகைச்சுவையின் தொகுப்புஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்
: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்
: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை
ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன்.
உடனே
, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன்.
300
ரூபாய் வந்தது. 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.


மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது.
மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு.
அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னன் பெரும் 'படையோடு' வந்து கொண்டிருக்கிறான்....அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை....
மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே.....

மன்னர் : அமைச்சரே, கவுரவம் பார்க்காமல் நீங்களே போய் சொறிந்து விட்டு வந்து விடுங்கள்...
மன்னர்: எதிரி மன்னன் படையுடன் வருகிறானாமே? ஏற்பாடுகள் தயாரா?
மந்திரி: எல்லா வெள்ளைக் கொடிகளும் தயார்.

மன்னன்: மந்திரியரே... தளபதி எங்கே ?..
மந்திரி: பக்கத்து நாட்டில் தளபதி போஸ்டிங் காலியா இருக்குன்னு... இண்ட்ர்வியு போயிருக்காரு....

மன்னர்: யாரங்கே?
சிப்பாய்: பேர் கூட தெரியாத நீயெல்லாம் ஒரு ராஜா.

ராஜா: ஏன் அவனை அடிக்கிறீங்க?
வீரன்: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.
ராஜா: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
வீரன்: அதைத்தான் சொல்லீட்டான்...!


அமைச்சர் : மன்னரே புறா மூலம் கடிதம் எழுதிய பக்கத்து நாட்டு மன்னனுக்கு என்னவென்று Acknowledgement அனுப்புவது?
மன்னர் : புறாக்கறி சூப்பர் என்று அனுப்பு.....


ராசா நீங்க நம்ம ராணிட்ட எப்பவும் ஜாக்கரைதையா இருங்க
ஏன்
அவங்க கத்தியால பழத்தை அறுத்துக் கொண்டே இப்படி பாடுனாங்க.
என்ன பாடுனாங்க
'உன்னைத்தான் நானறிவேன்...மன்னவனை யார் அறிவார்'' னு பாடுறாங்க. மன்னா..பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வரான்.
எந்த பக்கத்துல இரு ந்து வரான்...
கிழக்கு பக்கத்துல இருந்து...மன்னா...
அப்ப வா ... மேற்க்கு பக்கமா ஓடிடலாம்....

மன்னா!!! எதிரிநாட்டு மன்னன் நரகத்திற்குத்தான் செல்வான் என்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது.
எப்படி??
அவன் தன் படையோடு நம் நாட்டுக்குள் புகுந்துவிட்டான்.

அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?
மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?
அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்....ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...

புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...

ஒசாமா : !!!!!!!!!!


ச்சே.. போருக்குக் கிளம்ப திலகம் இடும்போதாவது
அரசி 'போகாதே.. போகாதே என் கணவா..'னு பாடுவாள்னு எதிர்பார்த்தேன்.
கள்ளி... கடைசிவரை வாயை திறக்கவே இல்லியே!


''புரிந்துகொள்ளுங்கள் மன்னா!
போருக்கு குதிரையில் போவதுதான் வசதி.
உங்கள் இஷ்டப்படி சொகுசாக பல்லக்கில் புறப்பட்டால்
போய்ச் சேரவே மூன்று மாத காலமாகும்.
படைவீரர்கள் பொறுத்துக்கொண்டாலும்
குதிரைகளும் யானைகளும் கோபப்படாதா?''


''கத்தியைப் போல கதாயுதத்தை இடுப்பில் சொருகினால் பளு தாங்காது
என்று சொன்னால் கேட்கிறீர்களா அரசே!''

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails